மகா சக்தி துணை

குருஜி பற்றி

மகா சக்தி துணை

குருஜி

குருஜியின் பெற்றோருக்கு 11 ஆண்டுகளாக ஆண் குழந்தை பிறக்க வேண்டும் என்று பல கோவில்கள், பல விரதங்கள், பல வேண்டுதல்கள் செய்து வந்தனர். அச்சமயத்தில் அவர்களின் வீட்டிற்கு அருகாமையில் இருந்த ஒரு தம்பதியினர் குருஜியின் பெற்றோருக்கு புட்ட பருத்தி சக்தி சாய்ராம் அவர்களது புகைப்படத்தை கொடுத்து நீங்கள் ஆண் குழந்தை பிறக்க வேண்டும் என்று வேண்டிக் கொள்ளுங்கள் என்று கூறினர். குருஜியின் பெற்றோரும் அந்த புகைப்படத்தை வைத்து வணங்கி வந்தனர், அற்புதம் நடந்தது அந்த வருடமே அவர்களுக்கு ஆண் குழந்தை பிறந்தது.

குருஜியின் பிறப்பும் ஆசீர்வாதங்களும்

குருஜியின் தாய் தந்தைக்கு எப்படியாவது நம் குழந்தைக்கு புட்ட பருத்தி சாய்பாபா தான் பெயர் வைக்க வேண்டும் என்று குழந்தையை அவரிடம் கொண்டு சென்றனர். சாய்பாபாவின் இடத்தில் குழந்தையை கொடுத்தவுடன் உடனே சாய்பாபா இந்த குழந்தைக்கு என் பெயரே வைக்கிறேன் என்று ” சக்தி சாய்ராம் ” என்று பெயர் வைத்துவிட்டார், குருஜியின் தாய் தந்தை கேட்கும் முன்பே அவரே குழந்தைக்கு பெயர் வைத்துவிட்டார் இது சாய்பாபாவின் அற்புதம், இந்தக் குழந்தை மிகவும் அற்புதக் குழந்தை என்று அங்கு இருந்த அனைவரும் கூறினர். அப்போது குருஜியின் தாய் தந்தை மிகவும் மகிழ்ச்சி அடைந்தனர். அதன் பிறகு குருஜி அவர்கள் பலமுறை புட்ட பருத்தி சென்று சாய்பாபா அவர்களை பார்த்து இருக்கின்றார், அவரிடம் பேசி, அவரிடம் ஆசிர்வாதம் பெற்று இருக்கிறார்கள்

புட்ட பருத்தி சாய்பாபா

குருஜி அவர்கள் 10ஆம் வகுப்பு படிக்கும் காலத்தில் முதன்முறையாக பாபாவை தரிசித்தார். பின்னர் சுமார் 20 வயதில் மீண்டும் பாபாவை தரிசித்தார். அப்போது பாபா அவரைத் தாமாகவே அடையாளம் கண்டு அழைத்தார்

திரு பரஞ்சோதி மகான் மகிமை

சிறிது காலத்திற்குப் பிறகு குருஜியின் 8வது வயதில் குருஜியின் தந்தை குருஜியை அழைத்துக் கொண்டு திரு பரஞ்சோதி மகான் அவர்களிடம் சென்று இந்தக் குழந்தைக்கு தியானம் கற்றுத் தாருங்கள் என்று கேட்டுக் கொண்டார். அதற்கு திரு பரஞ்சோதி மகான் அவர்களும் ‘சரி கற்றுத் தருகிறேன்’ என்று குருஜியின் தந்தை அவர்களிடத்தில் கூறினார். குருஜி அவர்களுக்கு தியானம் கற்றுக் கொடுத்தார், அவ்விடத்தில் சிறிது காலம் கற்றபோது பல அற்புதங்கள் ஏற்பட்டுள்ளது .

திரு பரஞ்சோதி மகான் அவர்களின் ஜீவசமாதி திருவொற்றியூரில் அமைந்துள்ளது

காஞ்சி பெரியவரின் மகிமை

இதன் பிறகு குருஜி அவர்களின் தந்தையார் எப்படியாவது காஞ்சி பெரியவரிடம் அழைத்துச் சென்று ஆசிப் பெற வேண்டும் என்று விரும்பினார். அதன் பொருட்டு குருஜி அவர்களை காஞ்சிபுரம் அழைத்துச் சென்றார், அப்பொழுது காஞ்சி பெரியவரை சுற்றி பெரிய கூட்டம் இருந்துள்ளது அந்த கூட்டத்திலும் காஞ்சி பெரியவர் எப்படித்தான் குருஜியையும் அவரது தந்தையையும் பார்த்தார் என்றே தெரியவில்லை. இருவரையும் அழைத்து அவர் தோல் மேல் இருந்த துண்டை எடுத்து அதில் குங்குமம் வைத்து கட்டி குருஜியிடம் இடம் கொடுத்தார். அத்துடன் ‘இவை இவன் பின்பு வரும் காலத்தில் ஒரு ஆலயம் அமைப்பான் அப்போது இந்த குங்கும மூட்டையை மூலஸ்தானத்தின் வைக்கவும்’ என்று கூறினார்.

என்ன ஆச்சரியம் பாருங்கள் இப்போது இந்த குங்கும மூட்டை திருமழிசையில் அமைந்துள்ள நமது சம்பாலா எந்திர தியான லோகத்தில் மகாசக்தி ( ஏகன் ) அவர்களது திருவுருவ சிலையின் கீழ் வைக்கப்பட்டுள்ளது. [ காஞ்சி பெரியவருக்கு அன்றே தெரிந்துவிட்டது நமது குருஜி பற்றி அதுதான் அவரின் மகிமை ]

ஆண்டுகள் வழியேயான பாதை

சிறு வயது

குருஜியின் பெற்றோருக்கு 11 ஆண்டுகளாக ஆண் குழந்தை வேண்டினர். புட்ட பருத்தி சக்தி சாய்ராம் புகைப்படத்தை வணங்கிய அந்த வருடமே ஆண் குழந்தை பிறந்தது. பின்னர் சாய்பாபா “சக்தி சாய்ராம்” என்று பெயரிட்டார்.

8வது வயது

குருஜியின் தந்தை அவரை திரு பரஞ்சோதி மகான் அவர்களிடம் அழைத்துச் சென்று தியானம் கற்றுத் தருமாறு கேட்டார். அங்கு பல அற்புதங்கள் ஏற்பட்டன.

10ஆம் வகுப்பு

குருஜி அவர்கள் 10ஆம் வகுப்பு படிக்கும் காலத்தில் முதன்முறையாக பாபாவை தரிசித்தார்.

15 வயது

குருஜியின் தந்தை அவரை திரு சிவலிங்கம் ஐயாவிடம் அழைத்துச் சென்று மந்திரம், தந்திரம், இறையருள் போதனைகளை கற்பிக்கும்படி கேட்டார்.

கல்லூரி காலம்

கல்லூரி காலங்களில் அழுக்கு மூட்டை சாமியார் (யோகி ராம் சூரத்) கனவிலும் தியானத்திலும் அழைத்தார்.

சுமார் 20 வயது

சுமார் 20 வயதில் மீண்டும் பாபாவை தரிசித்தார். அப்போது பாபா அவரைத் தாமாகவே அடையாளம் கண்டு அழைத்தார்.

குருஜி கண்ட குருமார்கள்

குருஜி பெற்ற உபதேசங்களும் அருளும் குருமார்கள் பக்கத்தில் விவரிக்கப்பட்டுள்ளன.

குருமார்கள்

மகாசக்தி காட்சியளித்த அற்புதம்

நமது குருஜி அந்த சிறுவயதில் தான் கற்றுக் கொண்ட வித்தையை முயற்சி செய்து பார்த்தார். அப்போது ஒரு அற்புதம் ஏற்பட்டது, குருஜி ஒரு மந்திரத்தை உச்சரித்து அங்கு மகாசக்தி பின்புறமாக காட்சியளித்தார் ( அந்த உருவம் ஒரு வெள்ளை நிற மிகவும் பிரகாசமாக காட்சியளித்தது ). குருஜி அவர்கள் தாயிடம் அம்மா இவர்தான் மகாசக்தி என்று கூற, உடனே குருஜியின் தாய் இவர் மகா முனீஸ்வரர் தோன்றி உள்ளார் என கூறியபோது அந்த உருவம் பன்மடங்கு உயர்ந்து பெரிய தோற்றமாக காட்சியளித்தது [ அந்த உருவம் தான் என்று(indru) நமது சம்பாலா எந்திர லோகத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது ].

மகாசக்தி (ஏகன்)