மகா சக்தி துணை
குருமார்கள்
மகா சக்தி துணை
குருஜி கண்ட குருமார்கள்:

1. திரு சிவலிங்கம் ஐயா
நமது குருஜியின் 15 வயதில், குருஜியின் தந்தை குருஜியை அழைத்துக் கொண்டு சிவலிங்கம் ஐயா என்ற குருவிடம் அழைத்துச் சென்று இந்தக் குழந்தைக்கு தாங்கள் தான் மந்திரம், தந்திரம், இறையருள் கிடைக்க போதனைகளை நீங்கள்தான் கற்பிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார் குருஜியின் தந்தை அவர்கள்.
சரி கற்பிக்கின்றேன் என்று திரு சிவலிங்கம் ஐயா கூறியுள்ளார். நான் சொல்லும்போது இந்த குழந்தையை அழைத்து வாருங்கள் என்று கூறி வரும் பௌர்ணமி அன்று வாருங்கள் என்று கூறினார். அதன் பிறகு
பௌர்ணமி அன்று இரவு குளத்தில் தண்ணீரில் நிற்க வைத்து நமது குருஜி அவர்களுக்கு இறைவனுடைய அருள் கிடைக்கும் மந்திரங்கள் அனைத்தையும் கற்பிக்கப்பட்டது பல நாட்களுக்குப் பிறகு இறைவனின் (மகாசக்தி) அருள் கிட்டியது நமது குருஜிக்கு .

2. யோகி ஸ்ரீ ராம் சூரத்
நமது குருஜி அவர்களின் கல்லூரி காலங்களில், அவரது கனவிலும், தியானத்திலும் அடிக்கடி அழுக்கு மூட்டை சாமியார் (யோகி ராம் சூரத்) அவர்கள் தோன்றி என்னை வந்து பார், என்னை வந்து பார்க்க மாட்டாயா என்று கூறியுள்ளார். குருஜி அவர்கள் யார் அந்த அழுக்கு மூட்டை சாமியார் எதற்காக நம்மை அவர் அழைக்கிறார் என்று தனது தந்தையிடம் கேட்டுள்ளார். குருஜி அவர்களின் தந்தையார் யார் அந்த அழுக்கு மூட்டை சாமியார் என்று விசாரித்து அவர் திருவண்ணாமலையில் இருப்பதாகவும் அவர் ஒரு சித்தர் என்றும் குருஜி அவர்களிடம் கூறியுள்ளார். குருஜி அவர்கள் திருவண்ணாமலை சென்று அழுக்கு மூட்டை சாமியார் இருக்கும் இடத்தை அறிந்து அவரை பார்க்க சென்றுள்ளார். குருஜி அவர்களை பார்த்த அந்த மாத்திரமே அழுக்கு மூட்டை சுவாமிகள் எத்தனை முறை உன்னை அழைப்பது ஏன் இவ்வளவு தாமதம் (bloody how many times I am calling you)என்று கூறி அவரது முதுகில் ஒரு அடி அடித்துள்ளார். அந்த அடி குருஜி அவர்களின் குண்டலினி சக்தியை எழுப்பியுள்ளது. அன்று முதல் குருஜி அவர்கள் இவரையும் ஒரு குருவாக ஏற்றுக் கொண்டுள்ளார்.

3. ஸ்ரீ லாகிரி மஹா சாயா
நமது சம்பாலா எந்திரலோகத்தில் மற்றும் ஒரு குரு அவர்களின் சிற்பம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது அவர் லாகிரி மஹா சாயார் அவர்களின் சிற்பமாகும். ஒரு முறை நமது குருஜி அவர்கள் இமயமலைக்கு தியானம் செய்ய சென்ற பொழுது ஒரு முதியவர் குருஜி அவர்களுக்கு ஒரு பாறையின் பின் இருந்து ஒரு உருவம் “இந்த வழியில் செல் ” என்று கூறியுள்ளது. ஆரம்பத்தில் அவர் அந்த பகுதியைச் சேர்ந்தவர் என்று நினைத்திருக்கிறார் தியானம் முடித்துவிட்டு மலையை விட்டு கீழே வந்ததும் அங்கு வசிப்பவர்களிடம் கேட்ட பொழுது அவர்கள் கூறியது நீங்கள் கூறும் உருவ அமைப்பை ஒற்றவர் லாகிரி மஹாசாயா ஆவார் (அவர் மகா அவதார் பாபாஜி அவர்களின் சீடர்), அவர்கள் ஜீவசமாதி அடைந்து வருடம் பல ஆகிவிட்டது என்று கூறினர். அவரது நினைவாக அவரது திருவுருவ சிலையானது நமது எந்திரலோகத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது