மகா சக்தி துணை
மகாசக்தி (ஏகன்)
மகா சக்தி துணை
சிறுவயது அனுபவம்
நமது குருஜி அந்த சிறுவயதில் தான் கற்றுக் கொண்ட வித்தையை முயற்சி செய்து பார்த்தார். அப்போது ஒரு அற்புதம் ஏற்பட்டது
மகாசக்தி காட்சியளித்தல்

குருஜி ஒரு மந்திரத்தை உச்சரித்து அங்கு மகாசக்தி பின்புறமாக காட்சியளித்தார் ( அந்த உருவம் ஒரு வெள்ளை நிற மிகவும் பிரகாசமாக காட்சியளித்தது ). குருஜி அவர்கள் தாயிடம் அம்மா இவர்தான் மகாசக்தி என்று கூற, உடனே குருஜியின் தாய் இவர் மகா முனீஸ்வரர் தோன்றி உள்ளார் என கூறியபோது அந்த உருவம் பன்மடங்கு உயர்ந்து பெரிய தோற்றமாக காட்சியளித்தது [ அந்த உருவம் தான் என்று(indru) நமது சம்பாலா எந்திர லோகத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது ].
பின்புற உருவ அமைப்பு
அவர்தான் மகாசக்தி ( ஏகன் ), அவரை குருஜி அவர்கள் பின்புறமாகத் தான் பார்த்துள்ளார் அதன் பொருட்டு நமது எந்திர ஆலயத்தில் மகாசக்தி அவர்களின் உருவச்சிலை பின் புறமாக அமைக்கப்பட்டுள்ளது .
இதில் சூட்சுமம் என்னவென்றால் மகா சக்தி அவர்கள் அருள் வார்த்தையாக கூறியது நீ எதுவாக நினைக்கிறாயோ நான் அதுவாகவே காட்சி அளிக்கிறேன் அதை உணர்த்தும் பொருட்டு இங்கு மகா சக்தி அவர்களுக்கு பின்புற உருவ அமைப்பை ஒற்ற சிலை வடிக்கப்பட்டுள்ளது.
ஏகன் என்பதன் பொருள்
திருமந்திரத்தில் சொல்லப்பட்டது போல் இறைவன் ஒருவன் ” ஏகன் ” அனேகனாக காட்சியளிக்கின்றார்.
இது ஒரு அற்புதமான விஷயம், இறைவன் யார்? அவர் ஹரியா, சிவனா, கர்த்தர், அல்லாஹ்வா?. திருமந்திரத்தில் சொல்லப்பட்டது போல் இறைவன் ஒருவன் ” ஏகன் ” அனேகனாக காட்சியளிக்கின்றார்.
உலகளாவிய / பல மதச் செய்தி
நமது சம்பாலா எந்திரலோகம் மதங்களுக்கு அப்பாற்பட்டது. இங்கு எல்லா மதத்தினரும் சமயங்களை கடந்து வருகை தந்து இறைவனின் அருளை பெறுகின்றனர். முன்பு கூறியது போல் இறைவன் ஒருவனே அவரை நாம் எதுவாக நினைக்கிறோமோ அதுவாகவே காட்சி அளிக்கிறார் மகாசக்தி.
சம்பாலா எந்திர தியான லோகத் தொடர்பு
அந்த உருவம் தான் நமது சம்பாலா எந்திர லோகத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. காஞ்சி பெரியவர் அளித்த குங்கும மூட்டை திருமழிசையில் அமைந்துள்ள நமது சம்பாலா எந்திர தியான லோகத்தில் மகாசக்தி ( ஏகன் ) அவர்களது திருவுருவ சிலையின் கீழ் வைக்கப்பட்டுள்ளது.