மகா சக்தி துணை
சம்பாலா எந்திர தியான லோகம்
மகா சக்தி துணை
அறிமுகம்
நமது சம்பாலா எந்திரலோகம் மதங்களுக்கு அப்பாற்பட்டது. இங்கு எல்லா மதத்தினரும் சமயங்களை கடந்து வருகை தந்து இறைவனின் அருளை பெறுகின்றனர். முன்பு கூறியது போல் இறைவன் ஒருவனே அவரை நாம் எதுவாக நினைக்கிறோமோ அதுவாகவே காட்சி அளிக்கிறார் மகாசக்தி.
சம்பாலா எந்திர லோகம் இங்கு அமைய காரணம்

மகா சக்தி கூறியதாக குருவின் குரு கூறுகையில், முக்கனிகள் சேர்ந்த இடத்தின் நான் இருப்பேன் [ அதாவது மா, பலா, வாழை ஆகிய மூன்று விருட்சங்கள் உள்ள இடத்தில் நான் இருப்பேன் ]. பல இடங்களில் தேடிப்பார்த்து கிடைக்கவில்லை இறுதியாக இந்த இடத்தில் தான் மூன்று விருட்சங்களும் இருந்தன அதே போல் பலநூறு வருடங்களாக இங்கு முனீஸ்வரரை வணங்கி வருகின்றனர், இவ்விடத்தில் தண்ணீர் மிக அருமையாக உள்ளது, அதே இடத்தில் சிவவாக்கியர் ஜீவசமாதி உள்ளது. இந்த இடத்தில் தான் இப்போது நமது சம்பாலா எந்திர லோகம் அமைந்துள்ளது.
மகாசக்தி / ஏகன்

அவர்தான் மகாசக்தி ( ஏகன் ), அவரை குருஜி அவர்கள் பின்புறமாகத் தான் பார்த்துள்ளார் அதன் பொருட்டு நமது எந்திர ஆலயத்தில் மகாசக்தி அவர்களின் உருவச்சிலை பின் புறமாக அமைக்கப்பட்டுள்ளது .
இதில் சூட்சுமம் என்னவென்றால் மகா சக்தி அவர்கள் அருள் வார்த்தையாக கூறியது நீ எதுவாக நினைக்கிறாயோ நான் அதுவாகவே காட்சி அளிக்கிறேன் அதை உணர்த்தும் பொருட்டு இங்கு மகா சக்தி அவர்களுக்கு பின்புற உருவ அமைப்பை ஒற்ற சிலை வடிக்கப்பட்டுள்ளது.
சம்பாலா எந்திரலோகத்தின் சிறப்பம்சங்கள்

நமது சம்பாலா இந்திரலோகத்தில் செவி அமைப்பை ஒற்றார் போல் இரண்டு செவிகள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன. அதில் ஒன்று சூரிய நாடி (சிவ – ஆண் சக்தி) மற்றொன்று சந்திர நாடி(சக்தி-பெண் சக்தி), சூரிய நாடியில் பெண்கள் தனது கோரிக்கைகளை வைக்க வேண்டும் அதேபோல் சந்திர நாடியில் ஆண்கள் தனது கோரிக்கையை வைக்க வேண்டும். இதன் சிறப்பம்சம் என்னவென்றால் இந்த செவி அமைப்பில் உள்ள துளைகள் வழியாக நாம் கூறும் கோரிக்கைகளின் அதிர்வலைகள் இந்த சம்பாலா எந்திரத்தின் மூலமாக பிரபஞ்ச ஆற்றலுடன் கலக்கிறது இதன் மூலம் நமது நியாயமான கோரிக்கைகள் மகா சக்தியின் அருளால் நிறைவு பெறுகிறது. குருஜி அவர்கள் எப்பொழுதும் கூறுவது போல இந்த செவி அமைப்பில் நாம் நமது கோரிக்கைகளை தெரிவித்துவிட்டு நான் சந்தோஷமாக இருக்கிறேன் ஆனந்தமாய் இருக்கிறேன் ஆரோக்கியமாக இருக்கிறேன் என்று கூறும் பொழுது அந்த நேர்மறை எண்ணங்கள் இந்த பிரபஞ்ச ஆற்றலுடன் கலந்து நமக்கு மற்றும் நம்மை சுற்றியுள்ள அனைவருக்கும் நன்மை பயக்கும்.
சம்பாலா திரிகோண எந்திரம்
நமது எந்திர தியான லோகத்தின் வடிவமைப்பு முச்சதுரம் ஆகும் (திருமந்திரத்தில் கூறப்பட்டிருக்கும் முச்சதுரம் திருமாலின் மார்பில் உள்ள முச்சதுரம்). இதன் மற்றொரு பெயர் சம்பாலா திரிகோண எந்திரம். இதன் மற்றொரு சிறப்பு என்னவென்றால் மதங்களை கடந்த ஒரு இயந்திரம். இங்கு அனைத்து மதத்தினரும் எந்தவித பாகுபாடு இன்றி தியானம் செய்து மகா சக்தியின் அருளை பெறலாம்.
மதங்களுக்கு அப்பாற்பட்ட தன்மை
நமது சம்பாலா எந்திரலோகம் மதங்களுக்கு அப்பாற்பட்டது. இங்கு எல்லா மதத்தினரும் சமயங்களை கடந்து வருகை தந்து இறைவனின் அருளை பெறுகின்றனர்.
இது ஒரு அற்புதமான விஷயம், இறைவன் யார்? அவர் ஹரியா, சிவனா, கர்த்தர், அல்லாஹ்வா?. திருமந்திரத்தில் சொல்லப்பட்டது போல் இறைவன் ஒருவன் ” ஏகன் ” அனேகனாக காட்சியளிக்கின்றார்.
ருத்ராட்ச மரம்
நமது தியான லோகத்தில் குருஜி அவர்களின் திருக்கரங்களால் நடப்பட்ட ருத்ராட்ச மரம் ஒவ்வொரு ஆண்டும் மூன்று முகங்களைக் கொண்ட ருத்ராட்சங்களை நமக்கு தருகிறது. இதன் சிறப்பம்சம் என்னவென்றால் குருஜி அவர்கள் இந்த ருத்ராட்ச மரத்தை வாங்கிய பொழுது இந்த மரம் ஒன்பது முகம் கொண்ட ருத்ராட்சமாக காய்க்கும் என்று கூறப்பட்டது ஆனால் இன்று இந்த மரம் நமக்கு இன்று மூன்று முகங்களைக் கொண்ட ருத்ராட்சங்களை நமக்கு தருகிறது. இது மீண்டும் நமக்கு மூச்சதுரத்தின் சக்தியை உணர்த்துகிறது.
குதம் & குயம் வாசல்

நமது தியான லோகத்தில் இரண்டு வாசல்கள் உள்ளன. ஒன்று குதம் வாசல் (கைலாய வாசல்)மற்றொன்று குயம் வாசல் (சொர்க்க வாசல்). ஒவ்வொரு மகா சிவராத்திரி அன்றும் நமது தியான லோகத்தில் குதம் வாசல் திறக்கப்படுகிறது, அதேபோல ஒவ்வொரு வைகுண்ட ஏகாதசி அன்று குயம் வாசல் திறக்கப்படுகிறது.
ஸ்ரீ லக்ஷ்மி குபேர சாய் நாதர்

நமது சம்பாலா எந்திர தியான லோகத்தில், ஸ்ரீ லக்ஷ்மி குபேர சாய் நாதர் அவர்களின் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. இந்த சிலை எவ்வாறு இங்கு வந்தடைந்தது என்பது ஒரு சுவாரசியமான கதை. நமது குருஜி அவர்கள் மகாசக்தி மற்றும் லாகிரி மகா சாயா அவர்களின் திருவுருவ சிலையை வாங்குவதற்காக ஜெய்ப்பூர் சென்றிருந்தார், அப்போது அங்கு இருந்த ஸ்தபதி உங்கள் பெயரும் சாய்ராம் இங்கு எங்களிடம் ஒரு சாய்ராம் சிலை உள்ளது நீங்கள் அதையும் எடுத்துக் கொள்ளுங்கள் என்று கூறினார். நமது குருஜி அவர்கள் முதலில் யோசித்தார், ஏனென்றால் நாம் அமைக்கும் ஆலயம் மகா சக்தி கானது இதில் எவ்வாறு நாம் சாய்பாபாவை பிரதிஷ்டை செய்ய முடியும் என்று யோசித்தார்.
சாய்பாபா அவர்களின் திருவுருவ சிலையை பார்த்தபொழுது, அச்சிலை சற்று சிறப்பு வாய்ந்ததாக நமது குருஜி அவர்களுக்கு தோன்றியது. ஏனென்றால், சாய்பாபா சிலையில் அவர் ஏழு பானைகளை வைத்திருந்தார் ( நமது குருஜி அவர்களுக்கு அந்த ஏழு பானைகளும் ஏழு சக்கரங்களை அறிவுறுத்தியது ), சாய்பாபா சிலையின் பீடத்தின் வலது பகுதியில் ஒரு குதிரையின் உருவம் பொறிக்கப்பட்டுள்ளது ( இது நமது குருஜி அவர்களுக்கு மாயக்குதிரை நினைவு கூறியது, ஏனென்றால் மகாசக்தி மாயசக்தி அற்புத சக்தி. நாம் எப்போது மாய சக்தியை தாண்டுகிறோமோ அப்போது அற்புத சக்தியை நாம் காண்கிறோம் ). அதுமட்டுமின்றி சாய்ராம் சிலையின் மடியில் அவர் ஒரு கீரிப்பிள்ளையை வைத்திருக்கிறார், இது அவர் குபேரன் அம்சம் என்பதை உணர்த்துகிறது.
ஒவ்வொரு வியாழக்கிழமை தோறும் இங்கு ஸ்ரீ செல்வ சாயி குபேர சாய்பாபா அவர்களுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்று அன்னதானம் சிறப்பாக நடைபெற்று வருகிறது
முக்கிய பூஜைகள்
வியாழக்கிழமை பூஜைகள், பௌர்ணமி செல்வ தியானம், அமாவாசை பித்ருக்கள் தியானம் ஆகியவை முக்கிய பூஜைகள் பக்கத்தில் உள்ளன.